விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஶ்ரீஆண்டாள் நாச்சியார் திருக்கோவிலில் ஒவ்வொரு வருடமும் ஐப்பசி மாதத்தில் நடைபெறும் ஶ்ரீஆண்டாள் ஶ்ரீரெங்கமன்னார் ஊஞ்சல் உற்சவ வைபவ விழா நாளை, நவம்பர் 8, சனிக்கிழமை தொடங்குகிறது. ஏழு நாட்கள் நடைபெறும் இந்த விழா நவம்பர் 14, வெள்ளிக்கிழமை அன்று நிறைவடையும். ஊஞ்சல் வைபவம் மாலை 7 மணியளவில், கோவில் வெளி சுற்றுப் பிரகாரம் தென்மேற்கு திசை மண்டபம் அருகே நடைபெறும் என கோவில் நிர்வாகம் தெரிவித்துள்ளது.