ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மேற்கு தொடர்ச்சி மலை வனப்பகுதியில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் கனமழையால் நீர்வரத்து அதிகரித்துள்ளது. இதனால் மலையில் உள்ள நீர்வீழ்ச்சி பகுதிகளில் இருந்து வரும் வெள்ளம் பல இடங்களில் ஒன்றாகி பெரும் ஆறாக கரையை நோக்கி பாய்ந்து வருகிறது. இதன் காரணமாக ஸ்ரீவில்லிபுத்தூர் செண்பகத்தோப்பு மற்றும் மம்சாபுரம் ராக்காச்சிக்கோயில் பகுதிகளில் நீர்வரத்து அதிகமாக காணப்படுகிறது.