ஸ்ரீவி: புதிய தரைப்பாலம் அமைக்கக் கோரி சாலை மறியல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தோப்பூர் கிராமத்தில் ரயில்வே சுரங்கப்பாதையில் 3 நாட்களாக தண்ணீர் தேங்கியுள்ளதால், 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகள் பள்ளிக்கு செல்ல சிரமப்பட்டனர். இதனால், பொதுமக்கள் தங்கள் குழந்தைகளை பள்ளிக்கு அனுப்பாமல், மதுரை - கொல்லம் தேசிய நெடுஞ்சாலையில் சாலை மறியலில் ஈடுபட்டனர். வன்னியம்பட்டி காவல்துறையினர் தண்ணீரை அகற்ற நடவடிக்கை எடுப்பதாக உறுதி அளித்ததை அடுத்து பொதுமக்கள் போராட்டத்தை கைவிட்டனர்.

தொடர்புடைய செய்தி