ஸ்ரீவி: போலீஸ்காரர் தற்கொலை; குடும்பத்தினர் கண்டித்ததால் சோகம்

ஸ்ரீவில்லிபுத்துார் மல்லி பழையபட்டியைச் சேர்ந்த 32 வயதான மணிகண்டன், எம்.புதுப்பட்டியில் போலீஸ்காரராகப் பணியாற்றி வந்தார். திருமணமான இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர். கடந்த ஒரு ஆண்டாக வேலைக்குச் செல்லாமல் இருந்த அவரை பெற்றோர் கண்டித்துள்ளனர். இதனால் மனமுடைந்த மணிகண்டன், நேற்று முன்தினம் (மே 4) இரவு தனது வீட்டில் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து மல்லி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி