எனினும் சிகிச்சை பலனின்றி மூளைச் சாவு அடைந்தார். அவரது உறவினர்களின் அனுமதியுடன் உறுப்பு மாற்று ஆணையத்தின் வழிகாட்டுதலின்படி அவரது கல்லீரல், சிறுநீரகம், தோல், கண் ஆகியவை தானமாக பெறப்பட்டது. இதனால் பலர் பயனடைந்தனர்.
இதனைத் தொடர்ந்து ஆட்டோ டிரைவர் சங்கரேஸ்வரனின் உடலுக்கு அரசு சார்பில் மருத்துவக் கல்லூரி முதல்வர் டாக்டர் ஜெயசிங், கண்காணிப்பாளர் டாக்டர் அரவிந்த் பாபு, துணை கண்காணிப்பாளர் டாக்டர் அன்புவேல் மற்றும் செவிலியர்கள் மரியாதை செலுத்தினர்.