சுமார் 3,198 வழக்குகளுக்கு தீர்வு காணப்பட்டது. இதில் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ.9 கோடியே 20 லட்சம் மதிப்பில் இழப்பீடு வழங்க உத்தரவிடப்பட்டது. மேலும் பாக்கியலட்சுமி என்ற பெண்ணுக்கு ரூ. 18 லட்சம் இழப்பீட்டுத் தொகை வழங்கப்பட்டது. இதற்கான காசோலையை மாவட்ட கூடுதல் நீதிபதி மணி வழங்கினார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட சட்டப்பணிகள் ஆணைக்குழு செயலாளர் நீதிபதி தனம், கூடுதல் மகளிர் நீதிமன்ற நீதிபதி அபர்ணாதேவி மற்றும் அனைத்து கோர்ட்டு நீதிபதிகள், வக்கீல்கள், அரசுத்துறை அலுவலர்கள், வங்கி மேலாளர்கள், காப்பீட்டு நிறுவன அலுவலர்கள் கலந்து கொண்டனர்.