ஶ்ரீவி: மாசி மாத அமாவாசை; சதுரகிரியில் குவிந்த பக்தர்கள்...

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே மேற்கு தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில் மாசி மாத பௌர்ணமியை முன்னிட்டு தமிழகத்தின் பல்வேறு பகுதிகளில் இருந்து ஏராளமான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்தனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில், சித்தர்கள் வாழ்வதாகக் கூறப்படுவதால் 'சித்தர்களின் சொர்க்க பூமி' என அழைக்கப்படுகிறது. நினைத்த காரியங்கள் நடக்கும் என்ற நம்பிக்கையில் பக்தர்கள் வருகை தருகின்றனர். வனத்துறையினர் காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே கோயிலுக்கு அனுமதி வழங்கியுள்ளனர். பக்தர்கள் இரவில் மலையில் தங்க அனுமதி இல்லை.

தொடர்புடைய செய்தி