இந்நிலையில் நேற்று மார்ச் 22 இரவு நேரத்தில் விலங்குகள் காட்டுக்குள் வராமல் இருக்க வேலி அமைத்துள்ளார். இதில் மின்சாரம் பொருத்தியுள்ளார். இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர் மங்காபுரம் கீழத்தெருவைச் சேர்ந்த முருகன் என்பவர் முயல் வேட்டையாடுவதற்காக விவசாய நிலத்துக்குள் சென்றபோது எதிர்பாராமல் முருகன் விவசாய நிலத்தில் கிடந்த வேலியை மிதித்துத் தாண்டும்போது மின்சாரம் தாக்கி சம்பவ இடத்திலேயே பலியானார். மேலும் தகவல் அறிந்து வந்த ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீசார் முருகன் உடலைக் கைப்பற்றி ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனைக்குப் பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இச்சம்பவம் குறித்து நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து தோட்டக்காரர் மாரியப்பனை கைது செய்து விசாரணை செய்து வருகின்றனர்.
மாரி செல்வராஜ் சிறந்த இயக்குநர்: நடிகர் சரத்குமார்