ஸ்ரீவி: கார்த்திகை தீபத் திருநாள்; மகா தீபம் ஏற்றம்

ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகேயுள்ள மலைக் கொழுந்தீஸ்வரர் குடவரை கோவிலில் கார்த்திகை தீபத் திருநாளை முன்னிட்டு கடல்மட்டத்தில் இருந்து 1000 அடி உச்சியில் அமைக்கப்பட்டுள்ள பீடத்தில் மகா தீபம் ஏற்றப்பட்டது. 108 கிலோ நெய், 118 மீட்டர் திரி கொண்டு அமைக்கப்பட்ட கொப்பரையில் ஏற்றப்பட்ட வத்திராயிருப்பு மற்றும் சுற்றுவட்டார கிராமங்களைச் சேர்ந்த பொதுமக்களும், பக்தர்களும் மலை மீது ஏறி தீப தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி