விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர், சுற்றுவட்டாரப் பகுதிகளில் நேற்றிரவு (டிசம்பர் 1) இடி, மின்னலுடன் கூடிய பலத்த மழை பெய்தது. வன்னியம்பட்டி, மல்லி, மம்சாபுரம், கிருஷ்ணன்கோவில் உள்ளிட்ட பகுதிகளிலும் கனமழை கொட்டித் தீர்த்தது. இதனால் சாலைகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு வாகன ஓட்டிகள் அவதிக்குள்ளாகினர். தமிழகம் முழுவதும் வடகிழக்கு பருவமழை பரவலாக பெய்து வரும் நிலையில், டிட்வா புயல் திசை மாறியதால் தென் மாவட்டங்களில் மழை பெய்யும் என வானிலை மையம் அறிவித்திருந்தது.