விருதுநகர்: ஸ்ரீஆண்டாள் கோயிலில் புஷ்பயாக விழா

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் ஸ்ரீ ஆண்டாள் கோவிலில் ஆடிப்பூர தேரோட்ட திருவிழா கடந்த ஜூலை 20 ஆம் தேதி கொடியேற்றத்துடன் தொடங்கி திருவிழா நடைபெற்று வந்தது. திருவிழாவின் முக்கிய நிகழ்வாக 5 கருட சேவை, சயன கோலம் மற்றும் தேரோட்டமும் நடைபெற்றது. மேலும் ஸ்ரீஆண்டாள் திருஆடிப்பூர பிரம்மோற்சவம் திருநாளான நேற்று இரவு ஜூலை 31 விழாவின் நிறைவு நிகழ்ச்சியாக ஸ்ரீஆண்டாள் சன்னதியில் ஸ்ரீஆண்டாள் ஸ்ரீரெங்கமன்னார் திவ்ய தம்பதிகளுக்கு புஷ்பயாகம் அதிவிமரிசையாக நடைபெற்றது. மேலும் இந்நிகழ்ச்சியில் ஸ்ரீவில்லிபுத்தூர் மற்றும் அதன் சுற்றுப்பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்து சுவாமியை தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி