ஸ்ரீவி: மின் குறைதீர் முகாம்...வெளியான அறிவிப்பு

ஸ்ரீவில்லிபுத்துார் மற்றும் வத்திராயிருப்பு தாலுகாக்களில் வசிக்கும் மக்களின் மின்சாரம் தொடர்பான நீண்ட காலமாக தீர்க்கப்படாத பிரச்சனைகள் மற்றும் இதர குறைகளை நிவர்த்தி செய்யும் வகையில், இன்று (நவம்பர் 15) காலை 11:00 மணி முதல் மதியம் 1:00 மணி வரை ஸ்ரீவில்லிபுத்துார் கோட்டைப்பட்டி செயற்பொறியாளர் அலுவலகத்தில் மின் குறைதீர் முகாம் நடைபெற உள்ளது. பொதுமக்கள் இந்த வாய்ப்பை பயன்படுத்தி கொள்ளுமாறு கோட்ட பொறியாளர் முனியசாமி கேட்டுக்கொண்டுள்ளார்.

தொடர்புடைய செய்தி