ஸ்ரீவில்லிபுத்துார் அடுத்த சதுரகிரி மலையில் மாசி மாத பிரதோஷத்தை முன்னிட்டு குவிந்த ஆயிரக்கணக்கான பக்தர்கள் மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.
ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்குத் தொடர்ச்சி மலைப் பகுதியில் அமைந்துள்ளது பிரசித்தி பெற்ற சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயில். இந்த கோயிலுக்கு கடந்த காலங்களில் தினந்தோறும் பக்தர்கள் அனுமதிக்கப்பட்ட நிலையில் கடந்த 2015 ஆம் ஆண்டு ஏற்பட்ட வெள்ளப்பெருக்கில் 10 பக்தர்கள் வரை உயிரிழந்தனர். இதனை அடுத்து மாதந்தோறும் பிரதோஷம், அமாவாசை பௌர்ணமி உள்ளிட்ட விசேஷ நாட்களில் 4 நாட்கள் மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி என்பது வழங்கப்பட்டு வருகிறது. இந்த நிலையில் மாசி மாத பிரதோஷம், மகா சிவராத்திரி மற்றும் அமாவாசையை முன்னிட்டு இன்று 25ஆம் தேதி முதல் வரும் பிப். 28 ஆம் தேதி வரை மொத்தம் நான்கு நாட்கள் சதுரகிரி கோவிலுக்கு பக்தர்கள் செல்ல கோயில் நிர்வாகம் மற்றும் வனத்துறை அனுமதி வழங்கி உள்ளது. இந்த நிலை இன்று மாசி பிரதோஷத்தை முன்னிட்டு மாநிலத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்து வருகை தந்த பக்தர்கள் கோயில் அடிவாரப் பகுதியில் பகுதியில் குவிந்தனர். பின்னர் பக்தர்கள் கோயிலுக்கு செல்ல அனுமதி வழங்கப்பட்ட நிலையில் தற்போது மலையேறி சாமி தரிசனம் செய்து வருகின்றனர்.