பக்தர்கள் சதுரகிரிக்கு செல்ல அனுமதி

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள சதுரகிரி சுந்தரமகாலிங்கம் கோயிலில், கார்த்திகை மாத பிரதோஷத்தை முன்னிட்டு டிசம்பர்2 அன்று தமிழகம் முழுவதிலும் இருந்து ஏராளமான பக்தர்கள் சாமி தரிசனம் செய்ய குவிந்தனர். கடல் மட்டத்திலிருந்து சுமார் 4500 அடி உயரத்தில் அமைந்துள்ள இக்கோயில், சித்தர்களின் சொர்க்க பூமி என அழைக்கப்படுகிறது. வனத்துறை மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் அறிவிப்பின்படி, காலை 6 மணி முதல் 10 மணி வரை மட்டுமே பக்தர்கள் கோயிலுக்கு அனுமதிக்கப்படுவார்கள் என்றும், நீரோடையில் குளிக்கவோ அல்லது இரவில் மலையில் தங்கவோ அனுமதி இல்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி