இதனால் ஆத்திரமடைந்த மாரிமுத்து அறிவாளால் சிவக்குமாரை சரமாரியாக வெட்டினார். படுகாயம் அடைந்த சிவக்குமார் இறந்து போனார். இதுகுறித்து சாத்தூர் நகர் போலீசார் வழக்குப் பதிவு செய்து மாரிமுத்துவை கைது செய்தனர். மேலும் கொலை வழக்கு தொடர்பாக ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள மாவட்ட செஷன்ஸ் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தனர். வழக்கை விசாரித்த மாவட்ட நீதிபதி ஜெயக்குமார் தொழிலாளியை கொலை செய்த மாரிமுத்துவிற்கு ஆயுள் தண்டனையும், ரூபாய் 5000 அபராதம் விதித்து தீர்ப்பு கூறினார். மேலும் அபராத தொகை கட்ட தவறினால் கூடுதலாக 3 மாத சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பு வழங்கி உள்ளார்.
ரயில் கட்டண உயர்வு: காங்கிரஸ் கடும் எதிர்ப்பு