ஸ்ரீவி: கோவில் விழாவில் தகராறு..கல்வீச்சில் போலீஸார் காயம்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே கோவில் விழாவில் தகராறு. சிறப்பு சார்பு ஆய்வாளர் மீது கல்வீச்சு.விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே அச்சம்தவிர்த்தான் கிராமம் உள்ளது. இங்கு நடைபெற்ற ஒரு விழாவில் இரு தினங்களுக்கு முன்னர் நள்ளிரவில் இருதரப்பினர் இடையே மோதல் ஏற்பட்டதாக கூறப்படுகிறது. 

இந்த மோதலில் இரு தரப்பினரும் கல்வீசி தாக்கிக் கொண்டதாக கூறப்படுகிறது. இச்சம்பவம் குறித்து தகவல் கிடைத்ததும் ஸ்ரீவில்லிபுத்தூர் துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜா, இன்ஸ்பெக்டர் முத்துகுமார் ஆகியோர் தலைமையில் போலீசார் நேரில் சென்று விசாரணை நடத்தினர். அப்போது இருதரப்பினருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டதாக தெரிகிறது. இதில் ஒரு தரப்பினர் வீசிய கல் சிறப்பு சார்பு ஆய்வாளர் கருப்பசாமி (வயது 56) மீது விழுந்தது. 

இதில் அவர் காயம் அடைந்தார். உடனடியாக அருகில் இருந்தவர்கள் கருப்பசாமியை மீட்டு ஸ்ரீவில்லிபுத்தூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக சேர்த்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில் பதட்டமான சூழல்நிலவியதால் 200-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி