ஸ்ரீவி: குழந்தை திருமணம்; பெற்றோர்கள் மீது போக்சோ வழக்கு

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே குழந்தை திருமணம் செய்த பெற்றோர்கள் மீது போக்சோ வழக்கு. விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள வத்திராயிருப்பு பகுதியைச் சேர்ந்த சவுந்தரபாண்டியன், கூலித் தொழிலாளியான இவரது மகள் 17 வயது சிறுமி ஒருவரை இன்ஸ்டாகிராம் மூலம் காதலித்துள்ளார். இது குறித்து தகவல் அறிந்த சிறுமியின் பெற்றோர்களிடம் சவுந்தரபாண்டியனின் பெற்றோர்கள் பேசி, அப்பகுதியில் உள்ள ஒரு கோயிலில் வைத்து இருவருக்கும் அவர்களது பெற்றோர்கள் திருமணம் செய்து வைத்துள்ளனர். 

இச்சம்பவம் குறித்து தகவல் அறிந்த ஊராட்சி ஒன்றிய நலஉதவி அலுவலர் சகுந்தலா புகாரின் பேரில் ஸ்ரீவில்லிபுத்தூர் அனைத்து மகளிர் காவல் நிலைய போலீசார், திருமணம் செய்த சவுந்தரபாண்டியன் மற்றும் அவரது பெற்றோர்கள், சிறுமியின் பெற்றோர்கள் ஆகிய 5 பேர் மீதும் போக்சோ மற்றும் குழந்தை திருமண தடுப்புச் சட்டப்படி வழக்கு பதிவு செய்து கைது செய்து, பெற்றோர்களிடம் தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி