அதன்படி, செங்கோட்டை-மயிலாடுதுறை ரயில் (வ. எண். 16848) வருகிற ஜூன் 6-ஆம் தேதி முதல் ஜூன் 11-ஆம் தேதி வரை விருதுநகரில் இருந்து மானாமதுரை, காரைக்குடி, புதுக்கோட்டை வழியாக திருச்சி செல்கிறது. இதற்காக இந்த ரயில் அருப்புக்கோட்டை, மானாமதுரை, சிவகங்கை மற்றும் காரைக்குடி ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்படும்.
மேலும் மறுமார்க்கத்தில் மயிலாடுதுறை-செங்கோட்டை ரயில் (வ. எண். 16847) வருகிற ஜூன் 8-ஆம் தேதி மற்றும் 11-ஆம் தேதிகளில் திருச்சியில் இருந்து காரைக்குடி, மானாமதுரை வழியாக விருதுநகர் வந்தடையும். இந்த ரயில் புதுக்கோட்டை, காரைக்குடி, சிவகங்கை, மானாமதுரை, அருப்புக்கோட்டை ஆகிய ரயில் நிலையங்களில் நின்று செல்லும் என தெற்கு ரயில்வே செய்தி குறிப்பு வெளியிட்டுள்ளது.