ஸ்ரீவி: நாயக்கர் கால கலைநயமிக்க கல்துாண்கள் கண்டெடுப்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூர் கோட்டை தலைவாசல் அருகே ஓட்ட மடம் என்ற பெயரில் அழைக்கப்பட்டு வரும் நாயக்கர் காலத்தைச் சேர்ந்த செங்கல் கட்டிடம் ஒன்று சிதலமடைந்த நிலையில் காணப்படுகிறது. 

இது குறித்து தொல்லியல் ஆய்வாளரும், வரலாற்றுத்துறை உதவி பேராசிரியருமான முனைவர் கந்தசாமி கூறியதாவது: புதுரைட்டன்பட்டி புதுகாலனியில் அமைந்துள்ள இந்த கட்டிடம் இடிந்தபோதிலும் கட்டிடத்தின் சுவர்கள் தாங்கி நிற்கின்றன. இந்த கட்டிட அமைப்பு நாயக்கர் காலத்தைச் சேர்ந்த கட்டுமானவியல் அமைப்பில் கட்டிடச் சுவர்த்தூண்களின் வேலைப்பாடுகள் அழகாக மிகநேர்த்தியாக வடிவமைக்கப்பட்டுள்ளன. 

இங்கு சில கல்மண்டபத் தூண்களும் சாய்த்து வைக்கப்பட்டுள்ளன. கல்தூண்களில் சிவலிங்கம், நாகம் மற்றும் பூவேலைப்பாடுகளை பண்டைய காலங்களில் அழகாக செதுக்கியுள்ளனர். பண்டைய காலங்களிலும் சில ஆண்டுகளுக்கு முன்பு பயன்பாட்டில் இருந்த மண்டபம் பின்னாளில் சிதலமடைந்து, மண்டபம் சரிந்து சில கல்தூண்கள் மட்டுமே எஞ்சியுள்ளன. தற்போது இவை கழிவுநீர் செல்லும் கால்வாயாக மாற்றமடைந்துள்ளது என்றும் கூறுகின்றனர். இவ்வாறு பேராசிரியர் கந்தசாமி கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்தி