ஸ்ரீவி: சிவராத்திரியை முன்னிட்டு கையில் அப்பம் சுட்ட மூதாட்டி

ஸ்ரீவில்லிபுத்தூரில் மஹாசிவராத்திரி திருநாளை முன்னிட்டு, 95 வயது மூதாட்டி முத்தம்மான், கொதிக்கும் நெய்யில் வெறும் கைகளால் அப்பம் சுட்டு பக்தர்களுக்கு வழங்கினார். பத்ரகாளியம்மன் திருக்கோயிலில் 100 ஆண்டுகளுக்கும் மேலாக நடைபெறும் இந்த பாரம்பரிய நிகழ்வில், முத்தம்மான் கடந்த 65 ஆண்டுகளாக பங்கேற்று வருகிறார். இதற்காக அவர் 40 நாட்கள் விரதம் இருப்பார். இந்த அப்பத்தை உண்டால் நோய்கள் குணமாகும் என்றும், குழந்தை இல்லாத தம்பதியினர் குழந்தை பாக்கியம் பெறுவார்கள் என்றும் பக்தர்கள் நம்புகின்றனர்.

தொடர்புடைய செய்தி