ஸ்ரீவி: அனைத்து ஓய்வூதியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்...

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் தமிழ்நாடு அரசு அனைத்து துறை ஓய்வூதியர் சங்கம் சார்பில் பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும், 70 வயதிற்கு மேற்பட்டவர்களுக்கு 10 சதவீதம் கூடுதல் ஓய்வூதியம் வழங்க வேண்டும், குறைந்தபட்ச ஓய்வூதியமாக ரூ. 7, 850 வழங்க வேண்டும், அனைத்து ஓய்வூதியர்களுக்கும் முழுமையான மருத்துவ காப்பீட்டு திட்டம் வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. வட்டக் கிளை தலைவர் கருப்பையா தலைமையில் நடைபெற்ற இந்த ஆர்ப்பாட்டத்தில் மாவட்டத் தலைவர் பாலகிருஷ்ணன் முன்னிலை வகித்தார். மாநில துணைத்தலைவர் சங்கரி கோரிக்கைகளை விளக்கிப் பேசினார். இதில் 100-க்கும் மேற்பட்ட ஓய்வூதியர்கள் கலந்து கொண்டனர்.

தொடர்புடைய செய்தி