மேலும் தகவலின் பேரில் காவல் நிலைய சார்பு ஆய்வாளர் சுந்தரராஜ் தலைமையில் போலீஸார் சம்பவ இடத்திற்கு சென்று சோதனை நடத்தினர். சோதனையில் வைத்திலிங்கபுரத்தை சேர்ந்த 55 வயது மூதாட்டி கச்சம்மாள் கஞ்சா விற்பனையில் ஈடுபட்டு வருவது தெரிய வந்தன.
அவரிடமிருந்து 100 கிராம் கஞ்சா மற்றும் ரொக்க பணம் ரூ 500/-ஐ பறிமுதல் செய்து, வன்னியம்பட்டி காவல் நிலையத்தில் வழக்கு பதிவு செய்து கைது செய்து தொடர் விசாரணை நடத்தி வருகின்றனர்.