ஸ்ரீவி: சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த பெண் உள்பட 5 பேர் கைது

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தோப்பிற்குள் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த பெண் உட்பட 5 பேர் கைது. வெடிபொருட்கள் பறிமுதல். விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு அருகே தனியார் தோப்பிற்குள் சட்டவிரோதமாக பட்டாசு தயாரித்த பெண் உட்பட 5 பேர் கைது செய்யப்பட்டனர். அங்கிருந்து ஏராளமான வெடிபொருட்கள் மற்றும் மூலப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஏழாயிரம்பண்ணையை சேர்ந்தவர் ஏசுதாஸ் 43. பட்டாசு தொழில் செய்து வந்தார். அங்கு அதிகாரிகள் மற்றும் காவல்துறையினர் ரெய்டு நடத்தியதால் தொழிலுக்கு மிகவும் இடையூறாக இருப்பதாக கருதினார். 

எனவே அதிகாரிகள் தொந்தரவு இல்லாத ஒதுக்குப்புறமான பகுதியை தேர்ந்தெடுக்க, தனது நண்பரான கூமாப்பட்டியை சேர்ந்த மாரிமுத்து, இவரது நண்பரான தங்கேஸ்வரன் ஆகிய மூவரும் சின்னகூட்டம் மலைக்கு பின்புறம் உள்ள தனது மாந்தோப்பில் வைத்து பட்டாசுகளை சட்டவிரோதமாக தயாரித்தனர். இதுதொடர்பாக போலீசாருக்கு வந்த தகவலின்படி அப்பகுதிக்கு ஆய்வுக்குச் சென்ற வத்திராயிருப்பு போலீசார் அங்கு ஏராளமான கரிமருந்து மூடைகள், வெடிபொருட்களுடன் பட்டாசு தயாரிப்பில் ஈடுபட்டிருந்ததைக் கண்டனர். உடனடியாக மூவரிடம் விசாரணை நடத்தியபோது, உடந்தையாக இருந்த சாந்தி மற்றும் சின்னப்பர் ஆகிய 5 பேரையும் கைது செய்து வெடிபொருட்களையும் பறிமுதல் செய்தனர்.

தொடர்புடைய செய்தி