ஸ்ரீவி: 3 ஆம் நாள் திருவிழா; அம்மன் மஞ்சள் பட்டில் வீதி உலா..

ஸ்ரீவில்லிபுத்தூர் பெரிய மாரியம்மன் கோயில் 3ஆம் திருவிழா. அம்மன் மஞ்சள் பட்டில் வீதி உலா. திரளான பக்தர்கள் சாமி தரிசனம். விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூரில் மிகவும் பிரசித்திபெற்ற பெரிய மாரியம்மன் கோயிலில் பூக்குழி திருவிழா கடந்த மார்ச் 18ஆம் தேதி கொடியேற்றத்துடன் துவங்கியது. திருவிழாவை முன்னிட்டு அம்மன் சிறப்பு பூஜைகள் செய்யப்படும். இதனைத் தொடர்ந்து காலை 10: 0010:00 மணிக்கு மேல் கோவில் வளாகத்திலிருந்து புறப்பட்டு அம்மன் அந்தந்த மண்டகப்படி எழுந்தருளலும். மண்டகப்படியிலிருந்து 3ஆம் திருவிழாவான அன்று அம்மன் மஞ்சள் பட்டு அணிந்து நள்ளிரவு மின் அலங்கார தேரில் அம்மன் திருவீதி உலாவும் நடைபெற்றன. மேலும் திருவிழாவின் முக்கிய நிகழ்வாக மார்ச் 29 மதியம் 12: 3512:35 மணிக்கு மேல் பக்தர்கள் பூக்குழி இறங்குதலும், மார்ச் 30 காலை 11:00 மணிக்கு மேல் தேரோட்டமும் நடக்கிறது. விழா ஏற்பாடுகளை கோயில் அலுவலர்கள் மற்றும் மண்டகபடி நிர்வாகத்தினர் சிறப்பாகச் செய்திருந்தனர்.

தொடர்புடைய செய்தி