ஸ்ரீவி: ஸ்ரீஆண்டாள் கோவில் எண்ணெய் காப்பு 3 நாள் உற்சவ விழா..

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூரில் உள்ள ஸ்ரீஆண்டாள் கோவிலில் மார்கழி நீராட்டு உற்சவத்தின் ஒரு பகுதியான எண்ணெய் காப்பு உற்சவம் ஜனவரி 8ஆம் தேதி முதல் நடைபெற்று வருகிறது. நேற்று (ஜனவரி 10) நடைபெற்ற மூன்றாம் நாள் உற்சவத்தில், திருமுக்குளம் அருகே உள்ள எண்ணெய் காப்பு மண்டபத்தில் கண்ணன் திருக்கோளத்தில் ஸ்ரீஆண்டாள் எழுந்தருளினார். இந்த சிறப்பு திருமஞ்சனத்தில், ஒரு நாட்டின் மகாராணிக்கு நிகரான உபசாரங்களுடன், மா பொடி, மஞ்சள் பொடி, திரவிய பொடி, பால், தயிர் மற்றும் வாசனை திரவியங்கள் கொண்டு அபிஷேக ஆராதனைகள் நடைபெற்றன. இதில் ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

தொடர்புடைய செய்தி