ஶ்ரீவி: வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு..

ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் நகை திருட்டு. விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் அருகே ஆளில்லாத வீட்டின் பூட்டை உடைத்து 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் பணம் திருடப்பட்டது. ஶ்ரீவில்லிபுத்தூர் மடவார் வளாகம் அருகே கிருஷ்ணா நகரை சேர்ந்தவர் குப்புசாமி (58). தனியார் மில்லில் மேலாளராக இருந்து ஓய்வு பெற்றவர். குப்புசாமி கோயம்புத்தூரில் உள்ள தனது மகனை பார்ப்பதற்காக கடந்த செவ்வாய்கிழமை மனைவியுடன் சென்றார். 

இந்நிலையில் குப்புசாமியின் வீட்டுக் கதவு திறந்துகிடப்பதாக உறவினர் செல்போனில் தகவல் அளித்தார். குப்புசாமி வீட்டிற்கு வந்து பார்த்தபோது, சிசிடிவி கேமரா, கதவு மற்றும் பீரோவை உடைத்து 20 பவுன் தங்க நகை மற்றும் ரூ. 80 ஆயிரம் பணம் திருடப்பட்டது தெரியவந்தது. சம்பவ இடத்தில் விருதுநகர் எஸ்.பி கண்ணன், டி.எஸ்.பி ராஜா ஆகியோர் நேரில் ஆய்வு செய்தனர். கைரேகை நிபுணர்கள் மற்றும் மோப்பநாய் ராணி வரவழைக்கப்பட்டு விசாரணை நடந்தது. இதுகுறித்து வன்னியம்பட்டி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனர். இதே பகுதியில் மேலும் இரு வீடுகளில் திருட்டு முயற்சி நடந்துள்ளது. ஏற்கனவே இதே வீட்டில் கடந்த 2019-ம் ஆண்டு 18 பவுன் நகை திருடப்பட்டுள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.

தொடர்புடைய செய்தி