விருதுநகர் மாவட்டம், ஶ்ரீவில்லிபுத்தூர் அருகே உள்ள திருவண்ணாமலையில், தென் திருப்பதி என்று அழைக்கப்படும் அருள்மிகு ஶ்ரீனிவாசப்பெருமாள் திருக்கோயிலில், கார்த்திகை மாதத்தின் முதல் சனிக்கிழமையான நவம்பர் 22 அன்று, சிறப்பு அலங்காரத்தில் பக்தர்களுக்கு காட்சியளித்தார். இந்த சிறப்பு தரிசனத்தில் ஶ்ரீவில்லிபுத்தூர் மற்றும் சுற்றுப்புற பகுதிகளைச் சேர்ந்த ஏராளமான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.