இந்த சிலைக்கு திரு இருதய அன்பின் சுடர் அன்னை மரியா என பெயரிடப்பட்டு ஆலயத்தினுள் கண்ணாடி பேழைக்குள் வைக்கப்பட்டு வழிபாடு செய்யப்பட்டு வருகின்றனர். இன்று(அக்.2) காலை ஆலயத்திற்கு வந்த பெண் மேரி மாதா சிலையை வழிபட்ட போது, மேரி மாதா கையில் உள்ள இருதயத்தில் இருந்து ரத்தம் போன்று வழிந்து கை சிகப்பு நிறமாக இருப்பதை கண்டு, சர்ச் நிர்வாகிகளுக்கு தகவல் அளித்தார். இதுகுறித்து தகவலறிந்த ஸ்ரீவில்லிபுத்தூர் பகுதியைச் சேர்ந்த நூற்றுக்கணக்கான பக்தர்கள் ஆலயத்திற்கு வந்து மாதா சிலையில் ரத்தம் வழிந்ததை ஆச்சரியத்துடன் பார்த்து வழிபாடு நடத்திவிட்டு சென்றனர்.
கூட்டணி பேச்சுவார்த்தை: அ.ம.மு.க. தவிர்க்க முடியாத சக்தி - தினகரன்