ராஜபாளையம்: தொடர் மழையால் சுவர் இடிந்து விழுந்து இருவர் காயம்

ராஜபாளையத்தில் பெய்த தொடர் கனமழையால் வீட்டின் மேற்கூரை ஓடு இடிந்து விழுந்து முதிய தம்பதியினர் படுகாயம் அடைந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. விருதுநகர் மாவட்டம், ராஜபாளையம் மற்றும் சுற்றுவட்டார பகுதிகளில் நேற்று காலை முதல் தொடர்ந்து மிதமான மழை பெய்து வருகிறது. இந்நிலையில் வடக்கு மலையடிப்பட்டி எம்.ஜி.ஆர் நகரை சேர்ந்த முதிய தம்பதிகளான கந்தசாமி (75), சங்கரம்மாள் (65) வசித்து வந்த வீட்டின் மேற்கூரை இடிந்து விழுந்து விபத்து ஏற்பட்டது.

 சுவரின் மேற்கூரை ஓடு முழுவதும் முதிய தம்பதி மீது விழுந்ததில் காயமடைந்தனர். இதை கண்டு அதிர்ச்சி அடைந்த அக்கம் பக்கத்தினர் இருவரையும் மீட்டு ராஜபாளையம் அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டு தற்போது சிகிச்சை பெற்று வருகின்றனர். தொடர் மழையால் வீட்டின் சுவர் இடிந்து விழுந்து முதிய தம்பதியினர் காயமடைந்த சம்பவம் அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியது.

தொடர்புடைய செய்தி