விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே மம்சாபுரம் பேரூராட்சி பகுதியில், மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரத்தில் அடிக்கடி வனவிலங்குகள் உலா வருகின்றன. இந்நிலையில், மம்சாபுரம் காவல் நிலையம் அருகே இரவு நேரத்தில் மலைப்பாம்பு ஒன்று சாலையின் குறுக்கே ஊர்ந்து செல்வதைக் கண்ட வாகன ஓட்டிகள் அச்சமடைந்தனர். இதனால், இரவு நேரங்களில் சாலையில் செல்லும் இருசக்கர வாகன ஓட்டிகள் எச்சரிக்கையுடன் செல்லுமாறு வனத்துறையினர் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.