ஸ்ரீவில்லிபுத்தூரில் பிரதமர் மோடி படம் பறிமுதல்

ஸ்ரீவில்லிபுத்தூர் அருகே தேர்தல் பறக்கும் படையினர் வாகனத் தணிக்கையில் ஈடுபட்டபோது, பிரதமர் நரேந்திர மோடி மற்றும் தாமரை சின்னம் பொறித்த 9,900 கை விசிறிகள் பறிமுதல் செய்யப்பட்டன. சிவகாசியிலிருந்து கேரள மாநிலம் கோட்டயத்துக்கு ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட இந்த விசிறிகள், கூட்டுறவு சார் பதிவாளர் ராஜலட்சுமி தலைமையிலான குழுவினரால் ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவில் கைப்பற்றப்பட்டன. இது தொடர்பாக சரக்கு வாகன ஓட்டுநர் காளிராஜன் மீது ஸ்ரீவில்லிபுத்தூர் நகர் போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி