பிளவக்கல் பெரியாறு அணை திறப்பு. வருவாய் அமைச்சர் பங்ற்பு

விருதுநகர் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்துாரை அடுத்த வத்திராயிருப்பு அருகேயுள்ள பிளவக்கல் பெரியாறு மற்றும் கோவிலாறு அணைகளில் இருந்து மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் வருவாய்த்துறை அமைச்சர் கே. கே. எஸ். எஸ். ஆர் இராமச்சந்திரன் இன்று (நவம்பர் 17) தண்ணீரைத் திறந்து வைத்தார். மேற்குத் தொடர்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள பிளவக்கல் அணை மூலம் 17 வருவாய்க் கிராமங்களில் உள்ள 40 கண்மாய்கள் நிரம்பி 7,219 ஏக்கர் விவசாய நிலங்களும், பெரியாறு பிரதானக் கால்வாய் மூலம் 960 ஏக்கர் விவசாய நிலங்களும் பாசன வசதி பெறும். தொடர் மழையால் அணையின் நீர்மட்டம் 41 அடியை தாண்டியதை அடுத்து, முதல்போக சாகுபடிக்கு தண்ணீர் திறக்க வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்தனர். அவர்களின் கோரிக்கையை ஏற்று தண்ணீர் திறக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்தி