தொழில்துறை அதிகாரிகளுடன் நடைபெற்ற அறிமுக கூட்டத்தில், பல்வேறு திட்டங்கள் குறித்து அமைச்சர் கீர்த்தனா கேட்டறிந்தார். குறிப்பாக, பல் மருத்துவக் கல்லூரிக்கு ஒதுக்கப்பட்ட இடத்தில் ஐடி பார்க் அமைக்கும் கடந்த ஆட்சிக் காலத்தின் இடம் ஒதுக்கீடு குறித்து கேள்விகள் எழுப்பப்பட்டுள்ளன. இதற்கு அமைச்சர், தங்களுக்கு சிறிது அவகாசம் அளித்தால், பிஎம் மித்ரா திட்டம் மற்றும் ஐடி பார்க் இடம் ஒதுக்கீடு குறித்த அனைத்து கேள்விகளுக்கும் உரிய பதிலை விரைவில் அளிப்பதாகத் தெரிவித்துள்ளார்.