விருதுநகர்: தனியார் பள்ளி வாகனங்கள் ஆய்வு

விருதுநகர் ஆயுதப்படை மைதானத்தில் மாவட்ட நிர்வாகம், போக்குவரத்துத் துறை, காவல் துறை மற்றும் பள்ளிக்கல்வித் துறை சார்பில் பள்ளி வாகனங்கள் ஆய்வு நடைபெற்றது. மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஸ்ரீநாதா மற்றும் மாவட்ட ஆட்சியர் சுகபுத்ரா தலைமையில் நடைபெற்ற இந்த ஆய்வில், 199 தனியார் பள்ளிகளைச் சேர்ந்த 877 பள்ளி வாகனங்களில் 688 வாகனங்கள் ஆய்வுக்கு உட்படுத்தப்பட்டு தகுதி பெற்றன. பேருந்தின் படிக்கட்டு, சிசிடிவி கேமராக்கள் உள்ளிட்டவை ஆய்வு செய்யப்பட்டன. சில வாகனங்கள் நிராகரிக்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி