ஸ்ரீவில்லிபுத்தூரை அடுத்த வத்திராயிருப்பு மற்றும் அதன் சுற்றுவட்டாரப் பகுதிகளில் நவம்பர் 22 இரவு சூறைக்காற்றுடன் கனமழை பெய்தது. இதனால், வத்திராயிருப்பு - கூமாபட்டி சாலையில் இருந்த 4 மின்கம்பங்கள் சாய்ந்து தொங்கின. இதன் காரணமாக சுமார் 4 மணி நேரம் மின்சாரம் தடைபட்டது. மின்வாரிய ஊழியர்கள் மாற்று ஏற்பாடு செய்து மின்சாரம் வழங்கினர். அதிர்ஷ்டவசமாக, சாலை ஓரத்தில் மின்கம்பங்கள் சாய்ந்ததால் பெரும் உயிர் சேதம் தவிர்க்கப்பட்டது.