காரியாபட்டி அருகே ஆவியூரில் மதுரை – தூத்துக்குடி தேசிய நெடுஞ்சாலையில் ஷேர் ஆட்டோ மீது லோடு வேன் மோதியதில் நால்வர் படுகாயமடைந்தனர். ஆவியூர் ஜங்ஷனில் சாலையை கடக்க முயன்ற ஷேர் ஆட்டோ மீது லோடு வேன் மோதியதில் ஆட்டோ கவிழ்ந்து நால்வரும் கை, கால்களில் முறிவு உட்பட பலத்த காயமடைந்தனர். காயமடைந்தவர்கள் காரியாபட்டி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, பின்னர் விருதுநகர் அரசு மருத்துவமனைக்கு மாற்றப்பட்டுள்ளனர். இது தொடர்பாக ஆவியூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து லோடு வேன் ஓட்டுநரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.