துரோகத்தை மையமாக வைத்து கூட்டணி அதிமுக- லியோனி...

ஸ்ரீவில்லிபுத்தூரில் நடைபெற்ற 'தமிழகம் தலைகுனியாது' பொதுக்கூட்டத்தில், வருவாய் மற்றும் பேரிடர் மேலாண்மைத் துறை அமைச்சர் கே.கே.எஸ்.எஸ். ராமச்சந்திரன் மற்றும் தமிழக பாடநூல் கழகத் தலைவர் ஐ. லியோனி ஆகியோர் சிறப்பு விருந்தினராகக் கலந்துகொண்டனர். அப்போது, மகளிர் உரிமைத் தொகை குறித்து பெண்கள் அமைச்சரிடம் உரிமையுடன் கேட்டதால் கலகலப்பு ஏற்பட்டது. மேலும், திண்டுக்கல் லியோனி, தமிழகத்தில் உள்ள தேசிய ஜனநாயக கூட்டணி துரோகத்தை மையமாக வைத்து அமைக்கப்பட்ட கூட்டணி எனப் பேசினார். திமுக சார்பில் மாநிலம் முழுவதும் இந்த பொதுக்கூட்டங்கள் நடைபெறுகின்றன.

தொடர்புடைய செய்தி