சிவகாசி: கேடிஆர் முன்னிலையில் அதிமுகவில் இணைந்த இளைஞர்கள்

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே திருத்தங்கல் பாண்டியன் நகரைச் சேர்ந்த சுமார் 300க்கும் மேற்பட்ட எந்த கட்சியையும் சாராத இளைஞர்கள், முன்னாள் அமைச்சர் கே.டி. ராஜேந்திரபாலாஜி முன்னிலையில் அதிமுகவில் தங்களை இணைத்துக் கொண்டனர். ராமச்சந்திரன் ஏற்பாட்டில் நடைபெற்ற இந்த நிகழ்ச்சியில், இணைந்த இளைஞர்களுக்கு ராஜேந்திரபாலாஜி கட்சித் துண்டு அணிவித்து வாழ்த்து தெரிவித்தார். ராஜேந்திரபாலாஜியின் களப்பணி மற்றும் சேவைகளைக் கண்டு பலரும் அதிமுகவில் இணைந்து வருவதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்தி