சிவகாசி அருகே தொழிலாளி மர்மச்சாவு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி அருகே நாரணாபுரம் சிவன் நகரைச் சேர்ந்த தவசியப்பன் (37) என்ற கூலித் தொழிலாளி மர்மமான முறையில் உயிரிழந்தார். வீட்டில் மயங்கிய நிலையில் கண்டெடுக்கப்பட்ட அவரை, காயங்களுடன் சிவகாசி அரசு மருத்துவமனையிலும், பின்னர் மதுரை அரசு மருத்துவமனையிலும் சிகிச்சைக்காக அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி அவர் உயிரிழந்தார். இந்த மர்மச்சாவு குறித்து சிவகாசி கிழக்கு போலீசார் விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி