சிவகாசியில் கஞ்சா விற்பனை.. பெண் குண்டாசில் கைது

விருதுநகர் மாவட்டம் சிவகாசி அருகே ஆலாஊரணி பகுதியை சேர்ந்த ராஜலட்சுமி (29) என்பவர், பிப்.1ம் தேதி அன்று விற்பனைக்காக 1.2 கிலோ கஞ்சா வைத்திருந்த நிலையில் திருத்தங்கல் போலீசாரால் கைது செய்யப்பட்டார். இவர் தொடர்ந்து இது போன்ற சட்டவிரோத செயல்களில் ஈடுபட்டு வந்ததால், மாவட்ட எஸ்பி கண்ணன், கலெக்டர் சுகபுத்ராவுக்கு குண்டாசில் கைது செய்ய பரிந்துரைத்தார். கலெக்டர் உத்தரவின் பேரில், ராஜலட்சுமி குண்டாசில் கைது செய்யப்பட்டு மதுரை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார்.

தொடர்புடைய செய்தி