சிவகாசி மாநகராட்சியில் வாக்காளர்திருத்தப்பணி; ஆட்சியர் ஆய்வு

விருதுநகர் மாவட்டம், சிவகாசி மாநகராட்சி அலுவலகத்தில், 1.1.2026 தேதியை தகுதிப்படுத்தும் நாளாகக் கொண்டு வாக்காளர் பட்டியல்களை திருத்தம் செய்வதற்கான சிறப்புத் தீவிரப் பணிகள் குறித்து மாவட்ட தேர்தல் அலுவலரும், மாவட்ட ஆட்சியருமான சுகபுத்ரா நேரில் சென்று ஆய்வு செய்தார். வாக்குச்சாவடி நிலை அலுவலர்கள் வீடுவீடாகச் சென்று கணக்கெடுப்புப் படிவங்களை வழங்கி வருகின்றனர். சிவகாசி சட்டமன்ற தொகுதியில் 31,617 வாக்காளர்களுக்கான கணக்கெடுப்புப் படிவங்கள் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளன. ஆட்சியர் அரசு அலுவலர்களுடன் ஆய்வு மேற்கொண்டு அறிவுரைகளை வழங்கினார்.

தொடர்புடைய செய்தி