விருதுநகர்: புகார் அளிக்க வந்த பெண்ணுடன் போலீஸ் ஏட்டு உல்லாசம்

விருதுநகர் மேற்கு காவல் நிலையத்தில் புகார் அளிக்க வந்த இளம்பெண்ணுடன் ஏற்பட்ட பழக்கத்தால், ஏட்டு ஒருவர் அப்பெண்ணின் வீட்டிற்கு சென்றார். அங்கு இருவரும் தனிமையில் இருந்தபோது, அப்பெண்ணின் கணவரால் ஏட்டு கையும் களவுமாக பிடிக்கப்பட்டார். தப்பிச் சென்ற ஏட்டுவை கண்டித்து அப்பகுதியினர் அவரது இருசக்கர வாகனத்தை சேதப்படுத்தினர். இதுகுறித்து அறிந்த மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு கண்ணன், சம்பந்தப்பட்ட ஏட்டுவை ஆயுதப்படைக்கு இடமாற்றம் செய்து உத்தரவிட்டார்.

தொடர்புடைய செய்தி