விருதுநகர்: வீடு புகுந்து நகை, பணம் திருட்டு

ராஜபாளையம் அருகே முறம்பு பகுதியைச் சேர்ந்த தனியார் பேருந்து நடத்துநர் சதீஷ்குமார் (31), உடல்நிலை சரியில்லாததால் பார்த்திபனூரில் உள்ள மாமியார் வீட்டிற்கு சிகிச்சைக்காக சென்றார். அங்கு மாமியார் வீட்டின் பீரோவில் வைக்கப்பட்டிருந்த 2 கிராம் தங்க மோதிரம் மற்றும் ரொக்கப் பணம் திருடு போனதாக கூறப்படுகிறது. இது குறித்து தளவாய்புரம் போலீஸார் வழக்குப்பதிவு செய்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

தொடர்புடைய செய்தி