சிவகாசி மாநகர் பகுதியில் அதிக அளவில் கால்நடைகள் முக்கிய சாலைகளில் திரிந்ததால்
அடிக்கடி விபத்துகள் ஏற்பட்டது. விபத்துக்களை தடுக்க வட்டாட்சியர் லோகநாதன் தலைமையிலான குழுவினர் இரவு சிவகாசி மாநகராட்சிக்குட்பட்ட பல்வேறு பகுதியில் திடீர் ஆய்வில் ஈடுபட்டனர். இந்த ஆய்வின் போது 11 பசுக்கள், 5 காளைகள், 2 கன்று குட்டிகள் என 18 கால்நடைகள் பிடிக்கப்பட்டு நெல்லை ஊத்து மலை கோசாலைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.