தொடர்ந்து பேசிய அமைச்சர், சமுதாயத்தில் துப்புரவுத் தொழிலாளர்கள் ஒவ்வொருவருக்கும் அவர்களுக்கான அங்கீகாரத்தை தர வேண்டும். அந்த அங்கீகாரம் உங்களுக்கான இட ஒதுக்கீடாக இருக்க வேண்டும், அங்கேயே அலுவலர்களாக, அதிகாரிகளாக பதவியில் உட்கார வேண்டும் என வழி வகுத்தவர் கருணாநிதி.
நீங்கள் யாருக்கும் கீழே பணிபுரியாதவர்கள் அல்ல. துப்புரவுத் தொழிலாளர்கள் சொந்தக் காலில் நின்று சுயமரியாதையுடன், பள்ளி மாணவிகள் கல்லூரி படிப்புக்கு செல்லும்போது மாதம் ஆயிரம் ரூபாய் வழங்கும் ஆட்சி ஸ்டாலின் ஆட்சி. அதேபோன்று புதுமைப்பெண் திட்டம், தலைவன் தவப்புதல் திட்டம், பெண்களுக்கான விடியல் பயணம், மகளிர் உரிமைத்தொகை என திமுக தலைமையிலான தமிழக அரசு ஒவ்வொரு சாதனைகளையும் செய்வதற்கு பின்னாலே ஒரு தலைமகன் இருக்கிறார் என்றார்.