தைப்பொங்கல் கொண்டாட்டம்;ஆசிரியர்கள் மாணவ, மாணவிகள் பங்கேற்பு.

விருதுநகர் மாவட்டம், சிவகாசி SHNV பள்ளியில் சமத்துவ தைப்பொங்கல் விழா கோலாகலமாக நடைபெற்றது. இதில் ஆசிரியர்கள், மாணவ, மாணவிகள் பங்கேற்றனர். தமிழக பாரம்பரிய உடையணிந்து வந்த மாணவியர்கள் 21 மண்பானைகளில் பொங்கலிட்டனர். பொங்கல் விழாவை முன்னிட்டு இலக்கிய கண்காட்சி நடைபெற்றது. மேலும், தாயம், தட்டாங்கல், பச்சைகுதிரை, கோலிக்குண்டு, டயர் வண்டி ஓட்டுதல், உறியடி, முறுக்கு கடித்தல் போன்ற மறந்து போன கிராமப்புற விளையாட்டுப் போட்டிகளும் நடத்தப்பட்டன. வெற்றி பெற்றவர்களுக்கு பள்ளி நிர்வாகம் சார்பில் பரிசுகள் வழங்கப்பட்டன.

தொடர்புடைய செய்தி