ஸ்ரீவில்லிபுத்துார் மல்லி போலீஸ் ஸ்டேஷன் அருகே நேற்று (மே 14) அதிகாலை சிவகாசியில் இருந்து பட்டாசு பண்டல்களை ஏற்றிக்கொண்டு குஜராத் சென்ற லாரி கவிழ்ந்து விபத்துக்குள்ளானது. மதுரை மாவட்டம் பேரையூரைச் சேர்ந்த லாரி ஓட்டுநர் ராம்குமார் (29) லேசான காயமடைந்தார். இந்த விபத்தில் தீ விபத்தோ, உயிர் சேதமோ ஏற்படவில்லை. மல்லி போலீசார் மற்றும் சிவகாசி தீயணைப்பு துறையினர் லாரியை மீட்டனர்.