அதனைத் தொடர்ந்து கொடிமரத்திற்கும், பலிபீடத்திற்கும், மஞ்சள், தயிர், பால், இளநீர், திருமஞ்சனம், தேன், பழக்கலவைகள் என்ற 11 வகையான அபிஷேகப் பொருட்களால் சிறப்பு அபிஷேகம் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து கலசங்களில் பூஜித்து வைக்கப்பட்ட புனித நீர் கொடிமரத்தில் ஊற்றப்பட்டு தீபதூப ஆராதனை நடைபெற்றது. மேலும் உற்சவருக்கும் தீபதூப ஆராதனை காண்பிக்கப்பட்டு கொடியேற்றம் நடைபெற்றது. இந்த வைகாசி வசந்த விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண வைபவம் வரும் 6ஆம் தேதியும், தோராட்டம் வரும் 9ஆம் தேதியும் நடைபெற உள்ளது. இந்த கொடியேற்ற நிகழ்ச்சியில் ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
முதல்வர் வீட்டுக்கு வெடிகுண்டு மிரட்டல் விடுத்த நபர் கைது