இந்த விபத்தில் படுகாயம் அடைந்த கோவிந்தராஜ் விருதுநகர் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு முதலுதவி அளிக்கப்பட்டு, மேல் சிகிச்சைக்காக மதுரை அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டுள்ளார். அங்கு சிகிச்சையில் இருந்த வாலிபர் கோவிந்தராஜ் சிகிச்சை பலன் இன்றி பரிதாபமாக உயிரிழந்தார்.
இந்த சம்பவம் குறித்து எம். புதுப்பட்டி போலீசார் வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.