சிவகாசி: மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் வாலிபர் தற்கொலை

சிவகாசி-மாரனேரி ரோட்டில் உள்ள முனீஸ்நகரை சேர்ந்த பிரகாஷ் (24) என்பவர், தனது மனைவி தாய் வீட்டிற்கு சென்றதால் மனமுடைந்து தற்கொலை செய்து கொண்டார். கோவைக்கு வேலை நிமித்தமாக சென்ற பிரகாஷ், விடுமுறைக்கு சிவகாசி வந்தபோது வீடு பூட்டி இருந்ததை கண்டு அதிர்ச்சியடைந்தார். மனைவியை தொடர்பு கொண்டபோது அவர் தாய் வீட்டில் இருப்பதாக கூறியதால், பிரகாஷ் தனது தந்தை வீட்டில் தூக்குபோட்டு தற்கொலை செய்து கொண்டார். இது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தொடர்புடைய செய்தி